இராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 236 மனுக்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விசாரணை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 236 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது :ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து, 26.01.2025 அன்று டெல்லியில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில், கலை , கலாச்சாரத்துறை சார்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கலை பண்பாட்டுத்துறை பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மைய சார்பில் மாணவர் - மாணவியர்கள் பங்கேற்று, பங்கேற்றதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
மேலும், 24.01.2025 அன்று டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், இந்திய அளவில் நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் 5194 கலைஞர்கள் கின்னஸ் உலக சாதனையில் பங்கேற்றார்கள். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் சார்பில் நிகழ்ச்சியில் மாணவர்கள் - மாணவியர்கள் பங்கேற்று பங்கேற்றதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்கள். சான்றிதழ் பெற்றவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து அவரிடம் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்