பரமக்குடி ஓவிய கலைஞர்கள் கெளரவிப்பு
பரமக்குடி பெயிண்டிங் ஓவிய கலைஞர்கள் எஸ்.குணசீலன், வி.பி.சங்கருக்கு மா.பொ.சிவஞானம் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மகாத்மா காந்திஜியின் 125 - வது ஆண்டு விழாவிற்காக... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெயிண்டிங் ஓவிய கலைஞர் கலைச்சுடர்மணி எஸ்.குணசீலன்1994 -ஆம் ஆண்டு காந்திஜி ராட்டையில் நூல் நூற்பது போன்று அனைவரது கண்களையும் ... மனதையும் ... கவர்ந்து இழுக்கும் வகையில் முழுமையாக வண்ணம் தீட்டி அசத்தினார். அந்தப்படம் திருப்பூரில் உள்ள வீரபாண்டி காதி கிராம பவனில் காட்சி பொருளாக வைக்கப்பட்டது. அதனை மறைந்த "சிலம்புச் செல்வர்" மா.பொ.சி. என்று செல்லமாக அழைக்கப்படும் மா.பொ.சிவஞானம் திருக்கரங்களால் பட திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, படத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர்கள் " கலைச்சுடர்மணி " எஸ்.குணசீலன், அவரது தந்தை " கலை முதுமணி " வி.பி.சங்கர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மா.பொ.சிவஞானத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட எஸ்.குணசீலனை இன்றைக்கும் அந்தப் படத்தை பார்த்த சமூக - கதர் - ஓவிய ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பலரும் 90804 24033 தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்திய வண்ணமாய் உள்ளனர்.
மாமுஜெமிக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.





கருத்துக்கள்