advertisement

பனைபொருள் வர்த்தக மையம் கட்ட அடிக்கல் நாட்டல்

பிப். 02, 2026 11:05 முற்பகல் |

நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு  அடிக்கல் நாட்டி  வைத்து, இதன் மூலம் 3000 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறுவார்களென  தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தகவல் தெரிவித்துள்ளார் .

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பையூரில்  கதர் வாரியத் துறையின் மூலம் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன், கைத்தறி - கைத்திறன், துணிநூல்  கதர்த்தறை செயற்பதிவாளர் வா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வனம்  கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தலைமையேற்று கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பனைபொருள் வர்த்தக மைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசியதாவது :
        தமிழ்நாடு முதலமைச்சர்  பனைவாரிய அமைப்புகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதிலும் இப்பகுதி அதிகளவு பனை மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் உள்ள பனைவாரிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பனைபொருள் வர்த்தக மையம் அமைக்க உத்தரவிட்டு பணி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
     இதன் மூலம் இப்பகுதியில் 88 சங்கங்கள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறும் வகையில் பனைபொருள் வர்த்தக மையம் செயல்பட உள்ளன.
     பொதுவாக , பனை மரத்தில் எவ்வித கழிவு பொருட்களுமின்றி வேர் முதல் குறுத்து பகுதி வரை அனைத்து பொருட்களும் மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக , பனைவெல்லம், பதனீர் போன்ற பொருட்கள் ஏற்றுமதி அளவிற்கு மதிப்பூட்டப்பட்ட பொருளாக இருந்து வருகின்றன.
     மேலும் , பனை ஓலையில் கலை நயமிக்க அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் விரும்பி வாங்கும் வண்ணம் இப்பகுதியில் கதர் துறையின் மூலம் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பனைவாரிய தொழிலாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதாரம் மேம்பாடு அமையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  வழங்கி வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்று வாழ்வாதாரத்தை மேம்பாடு அடையும் வகையில் பயன்பெற்றிட வேண்டும்.
       கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்குகிணங்க ரூ.26 கோடி மதிப்பீட்டில் சுற்றுசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
     அதே போல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ரோஸ்மா நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி சாயல்குடி சுற்றி புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனி திட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடிவறும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தையும் விரைவில் துவக்கி வைக்கப்படும். இதுபோல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்கள். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தெரிவித்தார்.
     முன்னதாக , தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைத்தார்.
      நிகழ்ச்சியில் , கதர் துறை துணை இயக்குநர் பாரதி , உதவி இயக்குநர்கள் டீ.எபநேசர் , முத்துக்குமார் , தமிழ்நாடு மாநில பனைவெல்லம் , தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் லிட் செயலாட்சியர் கூ.செந்தில்குமார்  , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்  கலந்து கொளர்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement