advertisement

அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

டிச. 12, 2025 3:37 முற்பகல் |

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று நீட்டிக்கப்பட்ட வழித்தடத்துடன் அரசுப் பேருந்து சேவை தொடங்கபட்டது.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 3 மணியளவில் தடம் எண் 22 என்ற அரசு பேருந்தும், மாலை 6.10 மணியளவில் தடம் எண் 43 என்ற பேருந்தும் புறப்பட்டு தண்டலை, சூளாங்குறிச்சி, பழையசிறுவங்கூர் வழியாக மையனுார் வரை செல்கிறது. இதை பகண்டைகூட்ரோடு வரை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், இரண்டு பேருந்துகளின் வழித்தடமும் பகண்டைகூட்ரோடு வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், துவக்க விழா நேற்று நடந்தது.நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய அரசு பேருந்துகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement