கன்னியாகுமரி: முருகப்பெருமான், வள்ளி- தெய்வானைக்கு ஆராட்டு
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது.
திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது.இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் பொய்கை திருக்குளத்தின் கரையில் வைத்து சிறப்புஅபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.





கருத்துக்கள்