advertisement

பொறுப்புணா்வோடு பணியாற்றிய நீங்கள் சமுதாய பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

மே 27, 2025 8:21 முற்பகல் |

பொறுப்புணா்வோடு பணியாற்றிய நீங்கள் சமுதாய பணியாற்ற வேண்டும் பட்டதாாி ஆசிாியர்கள் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாாி ஆசிாியர் கழகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்ட பட்டதாாி ஆசிாியா்கள் பணிநிறைவு பாராட்டுவிழா கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட புறவலா் ஜனகராஜ், மாவட்ட ஆலோசகா் சிவக்குமாா், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெகநாதன், பாலகணேசன், தலைமையிட செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் வசந்தி, பொன்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளர் பூப்பாண்டி, வரவேற்புரையாற்றினாா்.

பணிநிறைவு பெற்றவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பாிசு வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் “கடந்த காலத்தில் பள்ளி படிக்கும் குழந்தைகளை அதற்கேற்றாற்போல் கல்வி ஓழுக்கம் உள்ளிட்ட பல்வேறு நல்வழிப்படுத்தினிர்கள். தற்போதைய கல்விக்கு ஏற்ப சில மாற்றங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காரணம் அப்போதல்லாம் கரும் பலகையில் எழுதி அவா்களது கவனத்திற்கு கொண்டு சென்று படிப்பதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த காலம் உண்டு தற்போது உள்ள நிலையில் மாணவ மாணவிகள் இருக்கும் நிலையில் சற்று மாறுப்பட்டுள்ளது. 

ஆனால் எந்த நிலையில் அவர்கள் இருந்தாலும் அதற்கேற்றாற்போல் அவா்களது திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் உங்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பணியாற்றி இன்று ஓய்வு பெற்றுள்ள அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். கடந்த காலத்தில் எப்படி நீங்கள் பணியாற்றினீர்கனோ அதே போல் நமக்கு முதிா்வு ஏற்பட்டு விட்டது. என்ற சிந்தனை இல்லாமல் சமுதாய சிந்தனையோடு பணியாற்றி மேலும் பல நல்ல செயல்களை செய்ய வேண்டும். 

நீங்கள் வைத்த ஓய்வூதிய கோாிக்கைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு ஏற்கனவே இருந்து வருகிறது. இருப்பினும் நானும் உங்கள் கோாிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, ஆகியோர் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் அனைவரும் இந்த அரசுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பேசினாா். 

விழாவில் ஜாக்டோ ஜியோ மாநில ஓருங்கிணைப்பாளரும் நிறுவனத்தலைவருமான மாயவன், மாநில தலைவர் ஜெயக்குமாா், மாநில பொதுச்செயலாளர் குமரேசன், மாநில துணைத்தலைவர் வேலவன், மாநில பொருளாளர் விஜயசாரதி, மாநில சட்டச்செயலாளர் பிச்சைக்கனி, பட்டதாாி ஆசிாியர் செல்வின், உள்பட பலர் வாழ்த்துரை வழங்கி பேசினாா்கள். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கோவில்பட்டி பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சேகா், ராஜ்குமாா், அப்துல்கபூர்், கணேசமூர்த்தி, மாவட்ட சட்டசெயலாளர் கனகராஜ், தகவல் தொடர்பு செயலாளர் பால்முருகன், மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சித்குமாா், இணைச்செயலாளர்கள் நியாஸ், முருகேசன், கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜீவன்ஜேக்கப், உள்பட ஆசிாியா்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளர் ராஜதுரை, நன்றியுரையாற்றினாா்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement