கோரிக்கையை நிறைவேற்றி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தில் கடந்த வாரம் தனியார் நிறுவனம் பங்களிப்போடு திமுகவினர் நடத்திய மெகா இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து ஏராளமானவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது அப்பகுதியைச் சார்ந்த ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் வறுமை நிலையில் உள்ளதால் எங்களது பெற்றோர்களால் மிதிவண்டி வாங்கி தர இயலவில்லை என்றும் தாங்கள் எங்களுக்கு மிதிவண்டி வாங்கி தாருங்கள் என மழலையோடு பேசிய பள்ளிக் குழந்தைகள் கோரிக்கை வைத்தனர்.
இதனைக் கருணையோடு மேற்கண்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் மொபைல் எண்ணை அமைச்சரின் உதவியாளர் மூலம் பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் முகாமின் போது கோரிக்கை வைத்த ஏழை எளிய குழந்தைகளுக்கு பல வண்ண மாடல்களில் உள்ள மிதிவண்டிகள் வாங்கி கோரிக்கை வைத்த அனைத்து குழந்தைகளையும் இன்று எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை கூட மனதில் வைத்துக் கொண்டு அதனை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தனது சொந்த பணத்தில் கோரிக்கை வைத்த 7 குழந்தைகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கி அமைச்சர் சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனைப் பெற்றோர்கள் மிகவும் மன மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு அமைச்சரை மனதார வாழ்த்தினர். தங்களது குழந்தைகளுக்கு எங்களது வறுமையின் காரணமான குழந்தை ஆசைப்பட்டதுக்கு ஏற்ப மிதிவண்டி வாங்கி கொடுக்காத நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் தாயுள்ளத்தோடு செய்த உதவிக்கு மிக்க நன்றி என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர், அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சி என் அண்ணாதுரை முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர் சிங்கராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, இளைஞர் அணி சரவணகுமார், சிவபாலன் , மகளிர் அணி வளர்மதி, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி ஆல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்