advertisement

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கு : இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மே 27, 2025 10:59 முற்பகல் |

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 22.02.2024 அன்று  கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா மகன் பின்லேடன் (22) மற்றும் மணப்பாடு மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  விஜயராஜ்குமார் இன்று (27.05.2025) குற்றவாளியான பின்லேடன் மற்றும் மரிய ஜோஸ்வின் (எ) யோசுவா ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement