சேர்வைகாரன்மடத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு வாரத்தில் திறக்கப்படும் - கூடுதல் ஆட்சியர் பதில்
சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் 5 வருடமாக திறக்கப்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் ஊராட்சி கூடுதல் ஆட்சியர் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை கனிவாக ஏற்று கடந்த 2019 - 2020 தனது நிதியில் சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுத்து அமைக்கப்பட்டது.இந்நிலையில் அது கிடப்பில் போடப்பட்டது.முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தொடர்ந்து மக்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளின் கவனம் கொண்டு சென்று தொடர்ச்சியாக மனு அளித்து வந்தார்.
விரைவில் பயன்பாட்டு வரும் என்று ஊராட்சியால் பதில் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 21/4/2025 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு பொதுமக்கள் கையொப்பம் பெற்று அனைத்து ஆதாரங்களை அளித்தும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கையை அளித்தார்.மேலும் சம்பந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.பின் கடந்த வாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விடம் தங்கம்மாள்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களின்கொ கோரிக்கையை கொண்டு சென்றார்.மேலும் ஊள்ளாட்சி துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி கவனத்திற்கும் கொண்டு சென்ற நிலையில் அவரது முயற்சி வெற்றி பெற்றுள்ளது .இன்று அவர் அளித்த மனுவிற்கு பதில் கீழ்கண்டவாறு
(DODWS/E/2025/0002400) தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சேவைக்காரன்மடம் ஊராட்சியில் தங்கம்மாள்புரத்தில் வசிக்கும் *திருமதி.ஏஞ்சலின் ஜெனிட்டா என்பவர் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் கடந்த 5 வருடத்திற்கு முன் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள RO Plant-ஐ மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மேற்படி பொருள் தொடர்பாக, சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செயலர் அறிக்கையின்படி சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள பழுதான RO Plant-ஐ ஒரு வார காலத்தில் சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சீரான குடிநீர் வழங்கப்படும் என்று பார்வை 2 இல் கண்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது என கூடுதல் ஆட்சியர் ,தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிதுறை அவர்கள் பதில் அளித்துள்ளார் .முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா அவர்களின் தொடர் முயற்சியை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.ஏற்கனவே சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் குடிநீர் தன்மை மாறி உள்ள நிலையிலும் பொதுமக்கள் பலர் உப்புச்சத்து நோயினால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டு உள்ளனர் .ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவிக்கையில் எம் ஊராட்சி மக்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை ஊராட்சி பொதுமக்கள் துணை கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால் 1) டெண்டர் விடப்பட்டு கிடப்பில் உள்ள மாற்றுவழி மின்தடப்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும் .24/4/2025 அன்று பொதுமக்களின் கோரிக்கையாக நூறுநாள் திட்டம் மூலம் தரமற்ற நிலையில் அமைக்கபட்டிருக்கும் புதுமனை சாலை மற்றும் ஒடக்கரை சாலை முகப்பு பகுதி சீரமைக்க மனு அளித்தேன்.மேலும் கடந்த 2019 ம் ஆண்டு சாலை அமைக்க ஒப்புதல் பெற்று இன்று வரை அமைக்க படாமல் சாலை அமைந்ததாக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் ஒப்புதல் பெற வைத்துள்ள சேர்வைக்காரன்மடம் கிழக்குதெரு சிமெண்ட் சாலையை சுட்டி காட்டி மனு அளித்துள்ளேன்.
இந்த சாலையை உடனடியாக அமைத்து தரவேண்டும் .மேலும் 2019 ம் ஆண்டே ஆணை பெற்று இதுவரை அமைக்காமல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.வேலை நடைபெறுகிறது என தவறான தகவல் கடந்த ஆண்டில் அளிக்கபட்டது.பலமுறை மனு அளித்து தற்போது தொடர் முயற்சியால் டெண்டர் விடப்பட்டுள்ள காமராஜர் நகர் முதலாம் தெரு சாலையை போர்கால அடிப்படையில் அமைக்கவேண்டும்.மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேற்கொண்ட காரியங்கள் நிறைவேறும் வரை ஒய மாட்டோம் என்றார்.
கருத்துக்கள்