advertisement

தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

ஜூலை 10, 2025 10:23 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன்  உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதில் தேர்வு மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதுமான அறைக் கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான, 'ஸ்கிரைப்' (எழுத்தர்) உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தடையில்லா மின்சாரம், தேவையான தீயணைப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிட வசதியாக போதுமான அளவு பஸ்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு மையங்களை சுகாதாரமாக பராமரிக்கவும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு மையங்களுக்கு சென்றுவர சாய்வுதளம் மற்றும் வீல்சேர் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement