அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதாஜீவன்
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, " அங்கன்வாடி மையங்கள் மூடப்பவதாக தவறானது செய்தி வருகிறது. மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களில் அதன் அருகே உள்ள மையங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் வேறு எங்கேயாவது அங்கன்வாடி மையங்கள் தேவைப்பட்டால் இந்த மையத்தை அங்கு வைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது, மலைப்பகுதியில் 34 சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களின் வசதி மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கருத்துக்கள்