advertisement

தூத்துக்குடி அருகே மது விற்றவர் கைது

டிச. 12, 2025 3:01 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி   ஜெயின் நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ வாசுதேவன் தலைமையில் போலீசார், இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மொபட்டில் நின்றிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், காயல்பட்டினம் பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா (48) என்பதும், மது பாட்டில்களை மொபட்டில் மறைத்து வைத்து அதிக விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்து  மதுபாட்டில்கள், ரூ.66 ஆயிரத்து 500 மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.  
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement