தூத்துக்குடி மா.கம்யூ., சார்பில் காத்திருப்பு போராட்டம்
பிப். 02, 2026 7:36 முற்பகல் |
கயத்தார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 80 சதவீதம் பேர் நூறு நாள் வேலை திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர். தற்போது நூறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சிரமத்தில் உள்ளதாகவும் அப்பகுதியில் பள்ளி வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.





கருத்துக்கள்