வல்லநாடு நீரேற்று நிலையத்தில் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு
அக். 14, 2026 7:07 முற்பகல் |
வல்லநாடு தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்திலுள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையினை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, வல்லநாடு தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், குடிநீர் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திற்குச் சென்று, அதன் செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோக முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.





கருத்துக்கள்