குலசை தசரா திருவிழா: 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு அக். 16 முதல் 18-ம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவை ஒட்டி
பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக வரும் 19-ம் தேதி முதல் 21 வரை 200 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நெல்லை சார்பில் இயக்கப்படுகிறது.
இப் பேருந்துகளைப் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தசரா தொடர் விடுமுறையை முன்னிட்டு நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து 16 முதல் 18-ம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 300 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நெல்லை சார்பாக இயக்கப்படுகின்றன.
இப் பேருந்துகளைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நெல்லை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் செல்வம் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்