advertisement

தூத்துக்குடி -கே. வி .எஸ். பள்ளியில் ஹலோ பிரிட்டானிக்கா  கல்வித்திட்டம் அறிமுகம்

அக். 17, 2026 4:42 முற்பகல் |

 


தூத்துக்குடியில் ஹலோ பிரிட்டானிக்கா கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் பள்ளி என்ற சிறப்புடன்  கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஹலோ பிரிட்டானிக்கா’ என்ற புதிய கல்வித் திட்டத்தின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது

மாணவர்களின் வாசித்தல், எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு அடிப்படை ஆங்கில மொழித்திறன்களையும் மேம்படுத்துவதுடன்நவீன கற்றல் முறைகள் மூலம் அவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பள்ளியில் 3 வகுப்பு இருந்து 9 வகுப்பு வரை குழந்தைகள் பயிற்சியில் பயன்பெறுகின்றன.இதன் தொடக்க விழா பள்ளி தலைவர் கே எஸ் எஸ் ஏ திராவிட மணி தலைமையில் நடந்தது பள்ளி தலைமை ஆசிரியைமெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்று பேசினார்

விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி. ஆர். அசோக் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கம்ப்யூட்டர் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துஹலோ பிரிட்டானிக்கா கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி டைரக்டர் சி .எஸ் .ஆர்.அரவிந்த் குமார்  - பள்ளிசெயலாளர் டி. ஆர். தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்

 தூத்துக்குடியில் கடந்த 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கே .வி .எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement