பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன், ஹாசன் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா மீது வேலைக்கார பெண் உட்பட 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாருகள் செய்யப்பட்டன.இதையடுத்து இந்த வழக்குகள் CIT மற்றும் SIT மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்போது காவலில் உள்ளார்
நேற்று நீதிமன்ற தீர்ப்பு:இந்தநிலையில் மைசூரு மாவட்டம் K.R.நகர் சேர்ந்த வேலைக்கார பெண் மீது நடந்த வன்கொடுமை வழக்கில்,பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டு,பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என முடிவளித்தது.அகஸ்ட் 2ம் தேதி நாளைஅதாவது இன்று தண்டனை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.தீர்ப்பு வாசிக்கப்பட்டதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்ற அறையில் கண்ணீருடன் கதறினார்.
அவர் வழக்கறிஞர்களுடன் இணைந்து உடனடியாக நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார்.இந்தநிலையில் இன்று பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்