வயதோ 21 சம்பளம்.2.5 கோடி : ஹைதராபாத் மாணவனின் வரலாற்று சாதனை
IIT ஹைதராபாத் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ் நெதர்லாந்தை சேர்ந்த சர்வதேச நிறுவனமாக Optiver-வில் 2 மாத பயிற்சிக்கு தகுதியான இவர், பயிற்சிக்கு பின்னர் ரூ.2.5 கோடி சம்பளத்துடன் அதே நிறுவனத்தில் வேலையை பெற்றுள்ளார். IIT ஹைதராபாத் வரலாற்றிலேயே ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். இவரின் இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என மாணவர் எட்வர்ட் கூறியதை பார்க்கலாம்.
ஹைதராபாத் சேர்ந்த எட்வர்ட் நாதன் வர்கீஸ், 7 முதல் 12-ம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தார். இவரின் பெற்றோர்கள் இருவரும் பொறியாளர்கள். இதனால் சிறுவயதில் இருந்தே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த புரிதலும் ஆர்வமும் இவருக்கு உண்டானது. அதனையே கல்வி பாதையாக மாற்றி கணினி அறிவியல் பொறியியல் படிக்க விரும்பினார். இந்தியாவில் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIT ஹைதராபாத்தில் கணினி அறிவியல் பொறியியலில் சேர்ந்தார். ஐஐடி-யில் சேர்க்கை பெறுவது என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஜேஇஇ-யின் 2 தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
நெதர்லாந்தை சேர்ந்த சர்வதேச டிரேடிங் நிறுவனம் Optiver. இந்நிறுவனம் IIT ஹைதராபாத்தில் இருந்து 2 மாத கோடைக்கால பயிற்சிக்கு (Summer Internship) இருவரை தேர்வு செய்தது. அதில் எட்வர்ட் ஒருவராவார். முதல் 2 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, 6 வாரங்களில் செய்யக்கூடிய திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இதில் இவரின் திறனை வெளிப்படுத்தினார். எட்வர்ட்டின் திறன் அவருக்கு அந்நிறுவனத்தில் வேலையை உறுதி செய்தது.




கருத்துக்கள்