பெட்ரோல், டீசல் விலை மறுபடியும் உயர்வு
மே 19, 2026 5:46 முற்பகல் |
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.93.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியும், கவலையும் அடைய செய்து இருக்கிறது.





கருத்துக்கள்