advertisement

நடிகர் மதன்பாப் மறைவு

ஆக. 02, 2025 4:34 பிற்பகல் |

 

பிரபல நடிகர் மதன்பாப், 71 வயதில் காலமாகியிருக்கிறார். இவரது உயிரிழப்பு திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1984ல் திரையுலகில் அறிமுகமானவர், மதன்பாப். அஜித், விஜய், ரஜினி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். தனது இத்தனை ஆண்டு திரையுலக வாழ்க்கையில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மதன்பாப், கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் ஆக்டிவாக இல்லை. இதையடுத்து, தனது 71வது வயதில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இவரது இறப்பு, திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement