advertisement

தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு

ஜூலை 27, 2026 4:48 முற்பகல் |

 

தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரோக்யாவை தொடர்ந்து, அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2-வது முறையாக பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன.பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டாலும், பால் முகவர்களின் 'கமிஷன்' மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை.

எரிபொருள், கடை வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் முகவர்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டில், மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலை கொண்ட ஆவின் பாலை மக்கள் அதிகம் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement