பரமக்குடி முத்துமாரியம்மன் முளைப்பாரித் திருவிழா
பரமக்குடி பாரதிநகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் 22 -ம் ஆண்டு முளைப்பாரித் திருவிழா . தினமும் இரவு மகளிர்கள் கும்மியடித்து ஆடி கோலாகலமாக நடைபெற்றது.
ஆடி மாதம் பிறந்தாலே தமிழகம் முழுவதும் கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களில் உள்ள கோவில்களில் முனைப்பாரி திருவிழா சீரும் ... சிறப்பாக நடைபெறுவது நடைமுறை பழக்கமாக உள்ளது .அதனடிப்படையில் , ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா சீரும் ... சிறப்புமாக ... கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு 22-ம் ஆண்டு முளைப்பாரித் திருவிழாவாக கடந்த 20 - ந் தேதி (திங்கள்) முத்து எடுத்தல் நிகழ்வும், 21 - ந் தேதி (செவ்வாய்) முத்து பரப்புதல் நிகழ்வும் நடைபெற்றது. 26 - ந் தேதி (ஞாயிறு) மாலை 06.00 மணிக்கு குருவடியார் சுப. இலக்குமணன் திருவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்திட திரளான மகளிர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
வரும் 27 - ந் தேதி (திங்கள்) தங்கல் நிகழ்வும், 28 - ந் தேதி (செவ்வாய்) பாரி கோவிலில் இருந்து புறப்பட்டு பாரதிநகர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை, ஐந்துமுனை பகுதி வழியாக உலா வந்து கொழு வந்தடைதல் நிகழ்வும், 29 - ந் தேதி (புதன்) மாலை நூற்றுக்கணக்கான பாரி கோவிலில் இருந்து புறப்பட்டு பாரதிநகர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை, ஐந்து முனை பகுதி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வைகையாற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சக்திக்குமரன் செந்தில் ஆண்டவன் ஆலயம் சென்றடைந்து, இரவு வைகை ஆற்றில் பாரி கரைத்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெரும் திரளாக திரண்டு வரும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பொது மக்கள் என பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிப்பார். ஒவ்வொரு நாளும் பாரிக்கு முன்பு விரதம் இருக்கும் நூற்றுக்கணக்கான மகளிர்கள் கும்மியடித்து ஆடி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாரதிநகர் மகளிர்கள் , இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.திருவிழாவையொட்டி, கோவில் வளாகப் பகுதி, பாரதிநகர் அழகிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு " விழாக்கோலம் " பூண்டு காட்சியளிக்கிறது.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்