கன்னியாகுமரி :திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் 09.12.2025 காலை 10.45 மணியளவில் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் .S. பாரத்சிங் தலைமையில் பொதுச் செயலாளர் சிதம்பரதாணு முன்னிலையில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது..கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை துணைத்தலைவர் சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதில் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி இல்லாத நாட்களில் கண்காட்சி மற்றும் விற்பனை தற்காலிய GST எண் எடுத்து நடத்துவதற்கு அனுமதி இல்லாமல் நடைபெறுவதாக என விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து பதில் மூன்று நாட்களில் தரவில்லை என்றால் மண்டபம் சீல் வைக்கப்படும் என்று நோட்டீஸ் கொடுப்பதை அரசு நிறுத்த வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் காப்பாற்ற பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுத தீர்மானிக்கப்பட்துதிருமண மண்டபத்தில் கண்காட்சி விற்பனை நடைபெறும் மண்டபத்தில் வியபாரிகள் என்று கூறி மண்டபத்திற்கு முன் தர்ணா நடத்துவதையும், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போகும் வகையில் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் வெங்கட சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்.கூட்டத்திற்கு Y.R. மஹால் உரிமையாளரும் துணைச் செயலாளருமான ஹாஜி . யூசுப், கெங்கா கிரான்ட்யூர் மண்டப உரிமையாளரும் துணைச் செயலாளருமான கெங்காதரன், செயற்குழு உறுப்பினர் நடராஜன், தமிழரசு, டேனியல், அதீப் பத்பநாபன், ஜாபர் சாதிக், பியூலா அஜ்ந்த, உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்





கருத்துக்கள்