advertisement

திருப்பரங்குன்றம் மலையில் திடீர் போராட்டம் - எச்.ராஜா உட்பட 12 பேர் கைது

ஜன. 13, 2026 7:26 முற்பகல் |

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சர்ச்சைக்குரிய கல்லத்தி மரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உட்பட 12 பேரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா கொடியேற்றப்பட்டதை கண்டித்து அந்த கொடியை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மலைமேல் நெல்லி தோப்பு அருகே அமர்ந்து நேற்று இரவு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து கீழே அழைத்து வர முயன்றனர்.

ஆனால் எச். ராஜாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் குடியிருப்புவாசிகள், காவல்துறை வாகனத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒருவழியாக அவர்களை அப்புறப்படுத்தி, எச். ராஜா உட்பட 12 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தற்காலிகமாக பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள சாவடியில் அடைத்து வைத்துள்ளனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement