தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாிப்பு
தூத்துக்குடி 39வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகாித்தாா்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் 149வது பாகத்தில் வாக்குசாவடி முகவா்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வாா்டுக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின் அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் பின்னா் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். என்று ஆலோசனை வழங்கிய பின் அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்,
தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு நாம் செய்துள்ள திட்டங்களை முழுமையாக எடுத்து சொல்ல வேண்டும். விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். விடுபட்ட மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது கல்லூாி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு கப்பல் கட்டுதளம் தூத்துக்குடியில் வருகிறது ஒன்று அரசு சார்பிலும் மற்றொன்று தனியார் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது அதன் சார்பில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் மீண்டும் தமிழக முதலமைச்சர் தலைமையில் மீண்டும் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் இரண்டாவது முறையும் திமுக ஆட்சி 7வது முறை அமைய வேண்டும்.
தமிழகத்தில் எத்தனை அணிகள் களம் இறங்கினாலும் முதன்மையான அணி திமுக தான். இந்த பகுதியில் உள்ள நமது வாக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 20 நாட்கள் இந்த பணியை நாம் முழுமையாக செய்ய வேண்டும் மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாம் செய்துள்ள வளர்ச்சி பணிகள் ஏராளம் இந்தபகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தாா்சாலை பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது. என்பதை எல்லாம் மக்களுக்கு நாம் எடுத்துச்சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெறாத வளர்ச்சி பணிகள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது.
முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது தெருவிளக்கு. சாலை வசதி. பூங்கா. பார்க் வசதிகள் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்துள்ளோம் இன்னும் என்ன வசதிகள் செய்ய வேண்டுமோ அந்த குறைகளை மக்கள் விருப்படி உடனடியாக சாி செய்யப்படும். எஸ்ஐஆர் பட்டியல் உங்களிடம் உள்ளது அதன் அடிப்படையில் வீட்டுக்கு வீடு மக்களை நாம் சந்திக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார். பின்னா் மேலூா் பத்திரகாளியம்மன் கோவில் தெரு ஸ்டாா் பள்ளி சாலை உள்பட அப்பகுதியில் நடந்தே சென்று பொதுமக்களிடம் திமுகவிற்கு வாக்கு சேகாித்தாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார குழு தலைவரும் பகுதி செயலாளருமான சுரேஷ்குமாா், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டப்பிரதிநிகள் பொன்ராஜ், செல்வக்குமாா், நிா்வாகிகள் சங்கா், மாாிமுத்து, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா். பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூா்யா, மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்