advertisement

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்

டிச. 11, 2025 11:47 முற்பகல் |

 


தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

தேர்வு செய்த 5 ஜோடிகளுக்கும் நேற்று காலை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர். ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் வீதம் 5 ஜோடிகளுக்கும் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சேர், குக்கர், மின் விசிறி, சூட்கேஸ், ஸ்டூல், சமுக்காளம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement