advertisement

தூத்துக்குடி : சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

டிச. 12, 2025 2:48 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற  வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது உட்பட கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  இன்று (11.12.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த மாதத்தில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி வடபாகம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

கோவில்பட்டி உட்கோட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுபடுத்தியும், அதிகளவில் பறிமுதல் செய்தும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement