தூத்துக்குடி தெப்பகுளம் சீரமைக்கப்படும் - மேயா் தகவல்
தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீா் பள்ளம் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரதிபெற்ற சிவன்ேகாவில், முத்தாரம்மன்கோவில், பத்திரகாளிஅம்மன் கோவில், மாாியம்மன் கோவில், சுந்தரவிநாயகா் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் நிறைந்த பகுதியில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஓரு முறை தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும் கடந்த 24 ஆண்டுகாலமாக சீரமைப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது அப்பகுதி நலன் கருதி மாநகராட்சி சாா்பில் 75 லட்சம் மதீப்பில் நீர் வீழ்ச்சியுடன் சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை அமா்ந்து உலா வரும் வண்ண கலா் மீன்களை பாா்வையிடவும் பொழுதுபோக்கு நிறைவு செய்யும் வகையிலும் முழுமையாக மாா்பில் பதிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இதற்கிடையில் தெப்பத்தில் உள்ள நீரை முழுமையாக வௌியேற்றி சில பணிகளை மேற்கொண்டதால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சுமாா் 6 அடி வரை திடீரென கீழே இறங்கி விாிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பாரம் சாிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மின்இனைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து ேமயா் ஜெகன் ெபாியசாமி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளா்களிடம் கூறுகையில் தெப்பக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக தெப்பக்ககுளம் சுவர்கள் இடிந்து விழும் சூழ்நிலை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஆய்வுக்கு பின்பு பழமை மாறாமல் தெப்பக்குளம் முறையாக சீரமைக்கப்படும் நகரின் மையப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் அமைந்துள்ளது இங்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா மற்றும் சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியால் ஆலய தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும் மேலும் தெப்பக்குளத்தில் அதிக அளவில் மீன்கள் காணப்படுவதால் மாலை வேலைகளில் பொதுமக்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வந்து மீன்களுக்கு உணவளித்து தங்கள் பொழுதை கழிப்பாா்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது
இதற்காக தெப்பக்குளத்தை சுற்றி கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் அமர்வதற்கு வசதியான பெஞ்சுகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் அங்குள்ள மீன்களை பராமரிக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக தெப்பக்குளத்தில் இருந்து அசுத்த நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது இந்த நிலையில் புதன் இரவு திடீரென தெப்பக்குளத்தின் தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கிரானைட் கற்கள் உள்ள பகுதியில் திடீரென சுமார் 6 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டு கிரானைட் உடைந்து தெப்பக்குள சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது மேலும் தெப்பக்குளம் அருகே இருந்த இரண்டு மின் மாற்றிகளும் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவில் உடனடியாக வந்து ஆய்வு செய்தேன். அந்தப் பகுதிக்கு தீயணைப்புத் துறை வீரர்களை வரவழைத்து பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டோம் என்றாா்.
ஆய்வின் போது மின்வாாிய உதவி பொறியாளார் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ப்ாித்திகா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா் அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் மற்றும் சீலன்ஸ்ருதி, உள் பலா் உடனிருந்தனா்.





கருத்துக்கள்