advertisement

ரஜினி சூப்பா்ஸ்டாராக இருக்க காரணம் இதுதான் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

டிச. 12, 2025 4:54 முற்பகல் |

 

தூத்துக்குடி நடிகா் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை யொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பணிமன்றம் சாா்பில் சண்முகபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஜெயபால் தலைமை வகித்தாா். 

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல்மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் திரைப்படத்துறையில் 50ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளதால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரசிகா் மன்றங்களாக இல்லாமல் அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும் திரைப்பட துறையில் தனக்கென்று தனித்திறமையோடு நடித்து இன்று வரை சூப்பா் ஸ்டாராக திரைப்பட நடிகராக ஜொலித்து வருகிறாா். 

இத்தோடு இல்லாமல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவா் அதற்கென்று செல்லும் போது யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கென்று தனி வழியில் நடந்து சென்று கடந்து செல்வாா். ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் அனைவருக்கும் நன்மை செய்யும் நற்பனி மன்றமாக தொடர்ந்து செயல்படவேண்டும். 75வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வதோடு இந்த விழாவை சிறப்பாக செய்த அனைவரையும் பாராட்டுகிறேன். என்று பேசினாா். முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். 

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, கவுன்சிலா் பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூா்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ஜெபக்குமாா் ரவி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், ரஜினிமன்ற நிா்வாகி விஜயஆனந்த், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement