advertisement

இலங்கைக்கு கடத்த முயன்ற இலைகள் பறிமுதல்

ஜூலை 25, 2026 5:07 முற்பகல் |

 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.50லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இன்று அதிகாலை 1.15 மணியளவில் இனிக்கோ நகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ வீதம் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடி யுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை சுங்கத்துறை வசம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement