advertisement

தொடர் வன்முறை -நேபாள பிரதமர் ராஜினாமா

செப். 09, 2025 9:40 முற்பகல் |

 

நேபாளத்தில் தொடர்ந்து மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் சூழலில் அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும், சமூக வலைதள நிறுவனங்கள் நேபாளத்தில் பதிவு செய்ய முன்வரவில்லை.இதன் காரணமாக கடந்த 4ஆம் தேதியுடன் அந்நாட்டில் மொத்தம் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாடு தடை செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து அந்நாட்டு இளைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அரசு பெரும் ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், தடை செய்ய வேண்டியது ஊழலை, சமூக வலைதளங்களை இல்லை எனும் முழக்கங்களுடனும் நேற்று திடீரென பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்றும் அங்கு கட்டுக்கடங்காமல் போராட்டம் வெடித்துள்ளது. இன்று போராட்டக்காரர்கள் நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கு தீவைத்தனர். இப்படி தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், தற்போது நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement