advertisement

ரஷியாவில் 7.4 ரிக்டர்  அளவில் பயங்கர நிலநடுக்கம்

செப். 13, 2025 5:57 முற்பகல் |

 


ரஷியாவின் கிழக்கில் பகுதியில் உள்ள கம்சாட்கா கடற்கரை பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 39.5 கி.மீ. ஆளத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 3.3 அடி உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement