advertisement

சிவகாசி : வெடி விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உடல் கருகி உயிரிழப்பு

ஜூலை 26, 2026 7:17 முற்பகல் |

 

சிவகாசி அருகே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். .தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement