8 லட்சம் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!
வங்கிகளில் மாதம் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாக இருந்தபோதிலும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குமாறு வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இந்த சூழலில், இன்று (செவ்வாய்) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துக்கள்