ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் நேரமெல்லாம் மதுபிரியர்கள் முன்பே உஷாராகி, “நாளை கடை மூடல்” என்ற தகவலுடன் முந்தைய நாளே கூடுதல் பாட்டில்களை வாங்கி வீட்டில் குவித்து வைப்பது வழக்கமாகிவிட்டது.
அந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியாக, குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதும், அதற்கு முன்தினமே மதுபிரியர்கள் கடைகளுக்கு படையெடுத்தனர்.
இதன் விளைவாக, நேற்று முன்தினம் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளில் கூட்டம் அலைமோதியது. கவுண்டர்களுக்கு முன்பு நீண்ட வரிசைகள், அவசர அவசரமாக வாங்கும் காட்சிகள் என கடைகள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டன.இந்த “முன்கூட்டிய தயாரிப்பு” நாளில் ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சம் அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் மட்டும் மனமகிழ் மன்றங்கள் வழியாக ரூ.5 கோடியே 43 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




கருத்துக்கள்