advertisement

விசிலை விழுங்கிய விபரீதம்... எழும்பூர் மருத்துவர்களின் சாதனை

ஜன. 27, 2026 9:55 முற்பகல் |

 

கடந்த நவம்பர் மாதம் ஒரு சிறுவன் விளையாட்டாக விசிலை விழுங்கிய விபரீதம், ஒரு மாத கால போராட்டத்திற்குப் பிறகு தற்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 

 நவம்பர் மாதம் குழந்தை தவறுதலாக விசிலை விழுங்கியபோது, உடனடி பாதிப்பு ஏதும் தெரியவில்லை என்ற காரணத்தால் அருகில் இருந்த மருத்துவமனையில் அதை வெளியே எடுக்காமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

வித்தியாசமான அறிகுறி: கடந்த ஒரு மாதமாக அந்தச் சிறுவன் சுவாசிக்கும்போதெல்லாம் வினோதமான 'விசில்' சத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையைச் சோதித்த நிபுணர் குழு, விசிலை வெளியே எடுக்கத் திட்டமிட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த அந்தச் சிக்கலான முயற்சியின் இறுதியில், குழந்தையின் சுவாசப் பாதையில் இருந்த அந்த விசில் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement