advertisement

நெல்லை : இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ஜன. 27, 2026 9:32 முற்பகல் |

 

திருநெல்வேலி டவுண், புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன் (வயது 33) என்பவர், திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) மதன், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் & ஒழுங்கு) பாலமுருகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி இன்று பாஞ்சாலராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement