விஜய் ஊழல் பற்றி பேசினால் சிரிப்பு வருகிறது - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி நாடகமாடுகிறார். மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை இந்த அரசு தாறுமாறாக உயர்த்திவிட்டது.
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஊழல்வாதிகள் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறுகிறார். ஆனால் தனது சினிமா படம் வெளியாகும் போது சினிமா தியேட்டர்களில் கள்ளத்தனமாக டிக்கெட் விற்கும் விஜய், தற்போது தனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை என்கிறார். வருமான வரி முறையாக செலுத்தாததால் அவருக்கு ரூ.1½ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது விஜய் ஏற்கனவே ஊழல் செய்தவர் என்பதை தெளிவாக்குகிறது. ஊழல் பேர்வழியாக இருந்துகொண்டு, எல்லாம் செய்துகொண்டிருக்கிறார். அதேபோல் ஆதவ் அர்ஜுனா லாட்டரி சீட்லாம் எப்படி விற்பார் என உங்களுக்கே தெரியும். இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊழல் பற்றி பேசுவது சிரிப்பாகத்தான் வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.




கருத்துக்கள்