advertisement

ஜன 28 ல் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஜன. 27, 2026 10:15 முற்பகல் |

 

தவெக சார்பில் சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement