பரமக்குடி நீதிமன்றத்தில் குடியரசு தின விழா .
ஜன. 27, 2026 7:33 முற்பகல் |
ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் உத்தரவின்படி 77 வது குடியரசு தின விழா ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் , கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் . மேலும் , சார்பு நீதிபதி அறிவு சிறப்புரை ஆற்றினார்.முன்னதாக, பரமக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.பூமிநாதன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் யுவராஜ் , மூத்த இளம் வழக்கறிஞர்கள் அலுவலக பணியாளர்கள் வட்ட சட்ட பணிகள் குழுவின் உதவியாளர்கள், சட்டத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.




கருத்துக்கள்