இளையான்குடி அருகே மாபெரும் சிலம்பாட்ட போட்டி
கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இரண்டாமாண்டு மாபெரும் மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது .
தாய்க் கலையான சிலம்பக் கலையை காக்க வேண்டிய கடமையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் சார்பாக இரண்டாமாண்டு மாபெரும் விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி மாவட்ட அளவில் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான போட்டிக்கு இளையான்குடி 2 வது வார்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவருமாகிய அல்.இப்றாஹிம்சா தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாதன், நல்மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செல்லத்துரை, பொருளாளர் சித்ரா, இளையான்குடி ஜேஜே பர்னிச்சர் உரிமையாளர் சித்திக், பரமக்குடி ஸ்ரீ விக்னேஷ் ப்ளக்ஸ் நிறுவனர் மாணிக்கம், ராமநாதபுர மாவட்ட சிலம்பாட்டக்கழகச் செயலாளர் தில்லைக்குமரன், துணைத் தலைவர் பாண்டியன், துணைச் செயலாளர்கள் விஜய், காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி நிறுவனர் சரவணன் அனைவரையும் வரவேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.போட்டியில் , ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு , தொடுமுறை என பல்வேறு பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் களம் கண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற , பங்கு பெற்ற மாணவர் - மாணவியர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வுகளை தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் ஆசான் கோகுல் சபரி சிவம் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். போட்டியை நடத்திட ஏற்பாடுகளை தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப் பள்ளி நிறுவனர், கவிஞர் சோதுகுடி சண்முகன் சிறப்பாக செய்ததுடன் போட்டி முடிவில் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.




கருத்துக்கள்