advertisement

த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கவே தினகரன் விரும்பினார் - செங்கோட்டையன்

ஜன. 27, 2026 6:25 முற்பகல் |

 

 கோவையில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி. தினகரன் விரும்பினார். சூழ்நிலை காரணமாக டி.டி.வி. இந்த முடிவை எடுத்துள்ளார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.. யாருடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை என கூறினாலும் டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்னை எங்களுக்கு தானே தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது.

மேலும் ராமதாசுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு “நல்லது நடக்கட்டும்” என்று பதில் அளித்து விட்டு சென்றார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement