ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி - கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இந்திய 77 - வது குடியரசு தினவிழாவையொட்டி , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்ததுடன், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். தொடர்ந்து நடைபெற்ற மாணார்களது கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
மேலும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை அணிவித்தும், பல்துறை அரசு அலுவலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கியும், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி கெளரவித்தார்.
அது சமயம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ், மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு உயர் அலுவலர்கள், அலுவலர்கள், காவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளது வாரிசுதாரர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.




கருத்துக்கள்