திமுக ஆட்சியில் 50% நல்லதும் நடந்துள்ளது : பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். திமுகவின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 50% நல்லது நடந்திருக்கின்றது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொது செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கின்றார்.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 3ஆம் தேதி வரைக்கும் சுற்றுப்பயணம் இருக்கிறது..
கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன்.
தேமுதிகவிற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் கையில் கொடுத்து இருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன்..
மேலும், என்டிஏ கூட்டணிக்கு வராத கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? இது கேப்டன் கட்சி யாரும் ஏதும் பண்ண முடியாது,மிரட்ட முடியாது. அவர்கள் அவர்களுகேன்று கட்சி இருக்கிறது, தொண்டர்கள் இருக்கின்றார்கள், எந்த கட்சிக்கு எது நல்லதோ அதை அவர்கள் முடிவு எடுப்பார்கள்..
தேமுதிக மாநாடு பிரம்மாண்ட வெற்றி, ஒட்டுமொத்த மக்களின் ஆதரவோடும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகப்பெரிய உதவியாள் வெற்றி பெற்று இருக்கிறது.. அந்த மாநாடு மதுரை மாநாட்டிற்கு இணையாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து மாநாடும் பெஸ்ட் தான்..
விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பாஜகவா என செய்தியாளர்கள் கேள்விக்கு? சட்டம் தன் கடமையை செய்யும்.. அரசியலுக்காக செய்கிறார்களா? படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன்.. விஜயை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கின்றேன்..
திமுக 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. பல தடவை எந்த மார்க் என்று நான் கூறி இருக்கின்றேன். 50% நல்லதும் நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.




கருத்துக்கள்