advertisement

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே புதிய சாலை: மேயர் ஆய்வு

ஜன. 24, 2026 11:22 முற்பகல் |


தூத்துக்குடியில் மேலூர் ரயில் நிலையம் பகுதியில் புதிய சாலை மற்றும் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறும்போது, "தூத்துக்குடியில் இருந்து கிளம்பக்கூடிய பிரதான ரயில்கள் அனைத்தும் மேலூர் ரயில்வே நிலையத்திலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு மேல்புறத்திலுள்ள பகுதியின் வழியாகவும் மாநகர மக்கள் மேலூர் ரயில்வே நிலையத்திற்கு வந்து செல்லும்படியாக புதிய சாலை ஒன்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement