ஜன 26ம் தேதி கிராம சபைக் கூட்டம்: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
ஜன. 24, 2026 1:01 பிற்பகல் |
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பசுவந்தனை கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். எனவே, பொது மக்கள் அனைவரும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.




கருத்துக்கள்