இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
ஜன. 26, 2026 2:51 முற்பகல் |
படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.1கோடி மதிப்புள்ள பீடி இலைகளை தூத்துக்குடி கியூ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் இந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.ஒரு கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகனத்தின் ஓட்டுநரான சாத்தான்குளம் சௌந்தரபுரம் தர்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




கருத்துக்கள்