விடுமுறை தினம்- திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஜன. 26, 2026 2:56 முற்பகல் |
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று (ஜன 25) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதில் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூருக்கு பக்தர்கள் அதிகளவில் வாகனங்கள் வந்திருந்த காரணத்தால் பேருந்து நிலையம், தெப்பக்குளம் பகுதி, ரத வீதிகளிலும், மக்கள் தலையாக காட்சி அளித்தது. மேலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.




கருத்துக்கள்