தூத்துக்குடியில் குடியரசு தினவிழா
தூத்துக்குடியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77வது குடியரசு தின விழா தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கக. இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 440 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் 111 பேருக்கு முதல்வரின் பதக்கங்களும், சான்றிதழையும் வழங்கினார். மேலும் 33 துறைகளின் சார்பில் 38 பயனளிகளுக்கு 2 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 922 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.




கருத்துக்கள்