பேய்குளம் வந்த பிரேமலதா விஜயகாந்த் - தேமுதிக.,உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பேய்குளம் ஊராட்சியில் மக்களை தேடி மக்கள் தலைவர் "உள்ளம் நாடி இல்லம் தேடி" கேப்டனின் ரதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை மாவட்ட செயலாளர் சித்திரைராஜ் வழிகாட்டுதலின்படி ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரூர் முருகன்,துணைச் செயலாளர் சங்கரபாண்டியன், கிளை செயலாளர் துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தலைமையில் பேரூரில் பொதுமக்கள் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து வெள்ளமடம், குப்பாரம், சின்னமதிக்கூடல்,குறிப்பன்குளம்,அம்பலச்சேரி கட்டாரிமங்கலம் பகுதிகளில் ஆழ்வார்திருநகரி பேரூர் கழக செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் முருகையா, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்ராஜா முன்னிலையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.பழனியப்பாபுரத்தில் கிளை செயலாளர் சிவா நாடார்,ஜெயலெட்சுமி குடும்பத்தினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். பேய்குளம் பொதுக்கூட்ட திடலில் மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் தலைமையில் மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் கழக துணைச் செயலாளர் சந்திரன், தென்மண்டல துணைச் பொறுப்பாளர் தாமரைக்கண்ணன், திருச்செந்தூர் தொகுதி பொருப்பாளர் சதீஷ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொருப்பாளர் ஸ்டீபன்மரியதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொன்ராஜா,மாவட்ட அணி நிர்வாகிகள் பேச்சியம்மாள், பிரகாச வினோத், அப்பாஸ், கரடி முத்து,இசக்கிமுத்து ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்,பேரூர் முருகன் முத்துமாரி,சேக்அன்சார், ஆனந்தபாலன், காதர்முகைதீன், லூக்காஸ் பிரேம்ராஜ் நகரசெயலாளர் முத்துக்குமார், நாராயணமூர்த்தி விஜய்ஆனந்த்,பேச்சிமுத்து, உலகநாதன், ஏரல் பூக்கடை கண்ணன் செல்வம், இஸ்மாயில்,தொழிற்சங்கம் அப்துல்காதர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் அவர்களுக்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.




கருத்துக்கள்